கடந்த 2014 ஆம் ஆண்டு மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் முதன்மை காவலர் மூர்த்தி ரோந்து பணியின்போது சந்தேகபடும்படி நின்றிருந்த இரண்டு வாலிபரை விசாரித்தபோது அவர்கள் திடீரென்று முதன்மை காவலர் மூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் காவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது பிரபல ரவுடியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணிவேலின் என்பவரின் மகனான 38 வயதான வெள்ளப்பள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளியான கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
IND vs NZ Updates: 150 அடித்து ஆட்டமிழந்த மயங்க்... விழுந்த 7 விக்கெட்டும் அஜாஸ் வசம்!
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறையினர் அவர்கள் மீது கொலை முயற்சி, அரசு பணிசெய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட வெள்ளப்பள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளி மயிலாடுதுறை நெடுமருதூரை சேர்ந்த 32 வயதான கோகுலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
மயிலாடுதுறை: பழங்காவிரி ஆற்றுப்படுகை ஆக்கிரமிப்புகள் அகற்றம்...!
இவ்வழக்கு தொடர்பாக நேற்று இரவு விசாரணைக்கு வந்த இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கவுதமன் உத்தரவிட்டார். அதனையடுத்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். என்கவுண்டர் செய்யப்பட்ட மணல்மேடு சங்கரின் கூட்டாளியான பிரபல ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத் மீது பூம்புகாரை அடுத்த மேலே ஊரை சேர்ந்த திமுக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு, சென்னையில் பிரபல ஜவுளி கடையில் கொள்ளை அடித்தது, மயிலாடுதுறை, திருவெண்காடு, பூம்புகார், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கடலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 4 கொலைவழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது. வினோத்தின் கூட்டாளி கோகுலகிருஷ்ணன் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளது, குறிப்பிடத்தக்கது.
watch video | இந்தப்பக்கம் அனிருத்... அந்தப்பக்கம் தேவா.. ரஜினிக்கு மாஸ் BGM உருவானது இப்படித்தான்!!