இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.


இந்த நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டியான இந்தியா- நியூசிலாந்து மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்கினார். மயங்க் அகவர்வாலின் சதம், கில்லின் 40+ ரன்களால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் முதல் நாள் ஆட்டத்தில் சரிந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 


அதனை தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களில் மீண்டும் அஜாஸ் ஆதிக்கம் செலுத்தினார். வந்த வேகத்தில் சாஹா அவுட்டாக, அடுத்து களமிறங்கிய அஷ்வின் அஜாஸ் பந்துவீச்சில் டக்-அவுட்டாகி வெளியேறினார். இதனால், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், அஜாஸின் சுழலில் சிக்காத மயங்க், அக்சர் படேல் இணை தொடர்ந்து பேட்டிங் ஆடியது. இதுவரை, இந்த இணை 61 ரன்கள் சேர்த்திருக்கிறது. இதனால், உணவு இடைவெளியின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. மயங்க் 146* ரன்களுடனும், அக்சர் 32* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 


இந்நிலையில், உணவு இடைவெளிக்கு பின் தொடர்ந்த ஆட்டத்தில் மயங்க் 150 அடித்து அசத்தி இருக்கிறார். ஆனால், 150 ரன்கள் கடந்த அடுத்த பந்தில், அதுவும் அஜாஸ் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதனால், இப்போது அக்சரும், ஜெய்ந்த் யாதவும் களத்தில் உள்ளனர்.






முன்னதாக, முதல் நாள் போட்டி மழையால் தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில், இன்று சரியான நேரத்தில் போட்டி தொடங்கியதால் மொத்தம் 98 ஓவர்கள் வீச வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண