தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களுள் ஒருவர் தேவா. தேனிசை தென்றல் என்ற அடைமொழியுடம் அழைக்கப்படும் தேவாவின் குரலும் கானமும் 90’ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியம் . தமிழ் சினிமா மூலம் கானா பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைய செய்தவர். இன்றும் கிராமங்களில் கொண்டாட்டங்கள் என்றால் தேவாவின் இசையையும் குரலையும் தவிர்க்க முடியாது. திரைத்துறையை பொறுத்தவரையில் தேவாவின் 32 ஆண்டுகால சினிமா பயணத்தில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள் பல இருந்தாலும் அதில் இன்றும் ஃபிரஷ்ஷாக இருப்பது அண்ணாமலை படத்தில் ரஜினிகான தீம் மியூசிக். “டட் டட டட்டான்..டட் டட டட்டான்...” என மெய்சிலிர்க்க வைக்கும் அந்த இசைக்கு சொந்தக்காரர் தேவாதான் . ரஜினியையும் அந்த டைட்டில் கார்டையும் இனி எந்த காலத்திலும் பிரிக்க முடியாது .
நீங்கள் ஒரு ரஜினி ரசிகராக இருந்தால் தேவாவின் இசை அல்லாமல் வேறு இசையில் சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டில் கார்டை பார்த்தால் சற்று அதிருப்தி ஏற்படலாம் . ஏனென்றால் அந்த பி.ஜி.எம்மிற்கு உண்டான மவுசு 90 களில் வாழ்ந்த இளசுகளுக்கு நன்றாகவே தெரியும். சமீபத்திய பல படங்களில் ரஜினியின் டைட்டில் கார்டில் மாற்றங்கள் வந்தாலும், ஓல்ட் ஈஸ் கோல்ட் ‘ என்பது போல தேவாவின் இசையை யாராலும் பீட் செய்ய முடியவில்லை.ஒரு ஸ்டைலில் இல்லாம பல ஸ்டைல்ல அண்ணாமலை படத்தின் வாய்ப்பை தேவாவிற்கு கொடுத்தாராம் பாலச்சந்தர் ஒரு இன்ட்ரோ சாங், ஒரு மெலடி சாங், ரெண்டு ஃபோக் சாங், ஒரு வெஸ்டர்ன் சாங்னு கலவையான இசையால் அந்த படத்திற்கு பாடல் அமைத்திருப்பார் தேவா.
இந்த நிலையில் இளம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு தேவா அந்த bgm ஐ கற்றுக்கொண்டுப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தேவா. “தம்பி அனிருத்” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் இருவரும் இணைந்து தர்பார் படத்தின் BGM ஐ உருவாக்கியது தெரிய வருகிறது. இடை இடையே ‘தலைவா ‘ என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டு , ரீமிக்ஸில் உருவான BGM ஐ அனிருத் தர்பார் படத்தில் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உருவான பேட்ட படத்தில் , தேவாவின் டைட்டில் இசையை தொடக்கமாக வைத்து , “மரணம் மாஸு மரணம் “ என்னும் பாடலுக்கான இசையை அனிருத் உருவாக்கியிருந்தார்.
என்னதான் ரஜினிகான டைட்டில் கார்டுகளும், அதனை உருவாக்கும் இசையமைப்பாளர்களும் பல நவீனங்களை கண்டிருந்தாலும், தேவா இன்றும் என்றும் புத்துணர்ச்சி மாறாமல் இசை ராட்சியம் செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை.