மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா இரண்டு தினங்களாக ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை இன்று காலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு முதல் தரங்கம்பாடி தாலுக்காவில் விடாமல் கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

  


NLC Recruitment 2023: ரூ.1.60 லட்சம் வரை சம்பளத்தில் என்.எல்.சியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?




இந்நிலையில் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா மையமான டேனிஷ் கோட்டையை சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொள்ள வந்தனர். காரில் இருந்து இறங்க முடியாத அளவிற்கு கனமழை கொட்டினாலும் குடை பிடித்தபடி அடை மழையிலும் விடாது ஆய்வு செய்தனர்.  தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் வளர்ச்சி நிலைகள் குறித்து சுற்றுலாத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர், கோட்டாட்சியர், காப்பாச்சியர், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் என பல அதிகாரிகள் உடன் இருந்தனர்‌. இருப்பினும் கனமழை காரணமாக டேனிஷ் கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.


Squid Game 2: புதிய போட்டிகளுக்கு தயாரா மக்களே? ஓடிடியில் வெளியானது ஸ்குவிட் கேம் 2 வது சீசன்!




முன்னதாக நேற்று மாலை சீர்காழி அருகே உள்ள பூம்புகார் சுற்றுலா மையத்தில் சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த பூம்புகார் சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இங்கு கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் சிலப்பதிகாரக்கூடம் அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சிதலமடைந்து கேட்பார் அற்று கிடந்த பூம்புகாரை, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சுற்றுலா மையத்தை உலகளவில் தரத்தை மேம்படுத்தும் விதமாக 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. 


Udhayanithi Stalin:"ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை" - உதயநிதி ஸ்டாலின்




23 கோடி ரூபாய் செலவில் புதிதாக விடுதி அறைகள், சுற்றுலா பயணிகள் காத்திருப்பு கூடம், உணவகம், பார்க்கிங், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலாத்துறை அமைச்சர் இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை ஆணையர் காக்கர்லா உஷா பூம்புகார் சுற்றுலா மையத்திற்கு வந்தார். தொடர்ந்து அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். சிலப்பதிகாரம் கூடம்,  கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இங்கு நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை தரமாகவும் செய்து முடித்திட அதிகாரியிடம் உத்தரவிட்டார்.


Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? முன்கூட்டியே வேலையை முடிங்க!