கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட தொடர் ஸ்குவிட் கேம். கொரோனா, ஒட்டுமொத்த உலகத்தையே வீடுகளுக்குள் முடக்கிவைத்த சமயத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்த வெப் சீரிஸ் ஸ்குவிட் கேம்.
ஸ்குவிட் கேம்
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஸ்குவிட் கேம் எம்மி விருதுகளுக்கு தேர்வாகியது. ஆங்கிலம் அல்லாத ஒரு இணையத் தொடர் இந்த விருதுக்காக தேர்வாவது இதுவே முதல் முறை. அதே சமயத்தில் சிறந்த முக்கிய கதாபாத்திரத்திற்கான விருதை ஹ்வாங் டோங் ஹ்யூக் (Hwang Dong-hyuk) வென்று சாதனைப் படைத்தார். ஆசிய நடிகர் ஒருவர் எம்மி விருதை வெல்வது வரலாற்றில் அதுவே முதல் முறையாகும். லீ.யூ.மீ கெளரவ கதாபாத்திரத்திற்கான விருதை வென்றார். கூடுதலாக சிறந்த புரோடக்ஷன் டிசைன், சிறந்த ஸ்டண்ட் காட்சிகள், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று விருதுகளையும் வென்ற ஒரே ஆசிய தொடர் ஸ்குவிட் கேம்.
குறிப்பாக இந்திய ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது இந்தத் தொடர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் குறித்தத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது . இந்த இரண்டாவது சீசனில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டது.
ஸ்குவிட் கேம் 2
இந்த தொடரின் இரண்டாவது சீசனுக்காக அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் இன்று நவம்பர் 22 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை புதிய சவால்களால் நிறைந்த மக்களை இருக்கையில் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஒரு அனுபவமாக இந்த சீசன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள்
இம் சி வான், காம் ஹா நியுல், பார்க் சுங் ஹூன் ஆகிய புதிய நடிகர்கள் இரண்டாவது சீசனில் இணைந்துகொள்ள இருக்கிறார்கள். முதல் சீசனில் நடித்த லீ ஜுங் ஜே (Lee Jung-jae), லீ பியுங் ஹுன் (Lee Byung-hun), வி ஹா ஜுன் (Wi Ha-joon), கோங் யூ (Gong Yoo) ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க : Mansoor Ali Khan: ”நாளை ஆஜராகணும்”.. மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த காவல்துறை.. என்ன செய்யப் போகிறார்?