நெய்வேலி இந்தியா லிமெடெட் நிறுவனத்தில் (Neyveli Lignite Corporation Limited India ) உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 'Graduate Executive Trainee(GET)’ பணி இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலியாக உள்ள 295 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே காணலாம்.


பணி விவரம்


மெக்கானிக்கல்


எலக்ட்ரிக்கல்


சிவில்


மைனிங்


கம்யூட்டர்


மொத்த பணியிடம் - 295


கல்வித் தகுதி 


மேற்கண்ட பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், சிவில், கம்யூட்டர், மைனிங் ஆகிய துறைகளில் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இந்த கல்வித்தகுதியான அந்தந்த பணிகேற்பு மாறுபடும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.  https://www.nlcindia.in/new_website/careers/08-2023.pdf


ஊதிய விவரம்:


இப்பணிகளுக்கு வருமானம் பணியின் அடிப்படையில் ரூ.50 000 முதல் ரூ. 1,60,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






தேர்வு செய்யப்படும் முறை


இந்த பணிகளுக்கு GATE 2023 மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொறியியல் படிப்பில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். GATE 2023 - தேர்வில் 80 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


உடற்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்




சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்




விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.12.2023


விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 21.12.2023


BHEL Recruitment 2023 


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் ' Supervisor Trainee'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரம்


 Trainee (Mechanical)


Supervisor Trainee (Civil) 


 Supervisor Trainee (HR) 


பணி இடம்


இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஐதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 


ஊதிய விவரம்


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி



  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் /  எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணி காலம்


இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. 


விண்ணப்ப கட்டணம்



  • இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

  • பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • அதிகாரப்பூர்வ இணையத முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


எப்படி விண்ணப்பிப்பது?



  •  விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings-   கிளிக் செய்யவும்.

  •  ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.

  • அடுத்து“BHEL Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  • உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐ-கிளிக் செய்யவும்.

  • https://careers.bhel.in/st_2023/static/ST_Detailed%20Advertisement.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை அறியலாம்.


உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி - டிசம்பர்,2023


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.11.2023