மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 35 செ.மீ கனமழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் 350 மில்லிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. 

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று கிழக்கு காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக தீவிர கனமழை பெய்தது.  இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலை முதல் பலத்த மழை தொடங்கி பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மழை நீரில் 80 ஏக்கரில்  சம்பா பயிர்கள் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

Continues below advertisement

PM Modi TN Visit: ஜன.12ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி: பொங்கல் விழாவில் பங்கேற்பு!

என் அப்பா தோற்றார்... அண்ணன்கள் தோற்றனர்... 4வது படையெடுப்பில் நான் ஜெயித்தேன்’ -எண்ட்ரி குறித்து கலை இயக்குனர் கிரண்!

விவசாயிகள் தங்கள் வயலில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து தங்கள் பயிரை ஓரளவு காப்பாற்றிய நிலையில் நேற்று முதல் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பயிர்களில் ஆங்காங்கே புகையான் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், இந்த மழையால் புகையான் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்தால் எஞ்சிய பயிர்களும் அழிந்து விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்திக நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.  

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


வானிலை மைய கருவிகள் மாற்றப்பட வேண்டும்: மீண்டும் நினைவூட்டுகிறேன்..’ -முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 110 மில்லி மீட்டரும், கொள்ளிடத்தில் 103 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்ட முழுவதும் பெய்த மொத்த மழை அளவாக 350 மீல்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த  மழையின் காரணமாக பனியின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர

ட்விட்டர் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர

யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...

 

Continues below advertisement