சென்னையில் நேற்று திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால், மாநகர் முழுதும் முடங்கியது. தெருக்கள் பல மழை நீரில் மூழ்ந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின் வினியோகம் பாதித்தது. இப்படி பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க, முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியாகாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று திருச்சியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், உடனே சென்னை திரும்பினார். 






சென்னை திரும்பிய அவர், நள்ளிரவில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை அப்பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டார்.





அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர். முன்னதாக கனமழை பாதிப்பு காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். 






சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‛பேய் மழை பெய்திருக்கிறது. திருச்சியில் இருந்ததும், நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினேன். நீரை வெளியேற்றும் பணிகள் இன்று முடிந்துவிடும். வானிலை அறிக்கை பெறுவதில் இயந்திரங்கள் மாற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை. மீண்டும் அதை நினைவூட்டுகிறேன். மீண்டும் தேங்கிய இடத்திலேயே மழை நீர் தேங்க காரணம், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்த மழை வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம்,’’ என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





 





 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண