மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு  இந்த பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கபட்டு வருகிறது. மேலும் அவைகள் குஞ்சி பொறித்த உடன் வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டு வருகின்றனர்.




இந்நிலையில் குஞ்சு பொறித்த ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துகொண்டார். சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, வன காப்பாளர் ஜோசப் டேனியல், கூழையார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அங்குதன்  உள்ளிட்டோர் பங்கேற்று 1077 ஆமை குஞ்சுகளை இன்று பாதுகாப்பாக கடலில் விட்டனர். அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி பசிபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் ஆலிவ் ரெட்லி  ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை நாய், நரி, காகம்  உள்ளிட்டவைகளிடம் இருந்து  பாதுகாப்பாக வனத்துறையினர் சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.


India vs Pakistan: ’பிரதமர் மோடி நீங்க மனசு வைத்தால்தான் இது நடக்கும்..’ ஷாகித் அப்ரிடி ஓபன் டாக்..!




இதில் இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பழையார் முதல் தரங்கம்பாடி வரை கடல் பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இட்ட சுமார் 32,000 முட்டைகள் சேகரித்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது கட்டமாக இன்று 1077 குஞ்சுகள் முட்டையில் இருந்து பொறித்து வெளிவந்தது, அவ்வாறு வெளிவந்த அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கடலில் விட்டு மகிழ்ந்தனர். இன்று விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற்பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி வனத்துறையினர், வருவாய் துறையினர், உள்ளுர் மீனவர்கள்  உடன் இருந்தனர்.


Team India's ODIs Stats: மோசமான தோல்வியிலும் முக்கியமான தோல்வி.. ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் படுதோல்விகள் லிஸ்ட்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண