India's 10 wicket defeats: விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பிற்கு ஆஸ்திரேலிய தொடக்க ஜோடி விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் இலக்கை துரத்தியது. இதன்மூலம், 234 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிக மோசமான தோல்வி இதுவாகும். பொதுவாக இந்திய அணி இவ்வளவு மோசமாக தோற்றதில்லை.


கடந்த 1974ம் ஆண்டு முதல் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்திய அணியின் இந்த 49 ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இது ஆறாவது முறையாகும். இருப்பினும், இந்த 6 தோல்விகளிலும், மோசமான தோல்வியை விசாகப்பட்டினத்தில் நடந்த நேற்று முன் தினம் நடந்த போட்டிதான். ஏனெனில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இதற்கு முன் எத்தனை முறை இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



  • முதல் முறையாக ஜனவரி 10, 1981 அன்று இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகத் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டம் மழையால் 34-34 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இங்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது, பதிலுக்கு நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடியான பென்சன் & ஹெட்ஜஸ் 29 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நியூசிலாந்து அணியை வெற்றிபெற செய்தனர். 

  • 5 மார்ச் 1997 அன்று இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இங்கு ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் மற்றும் சந்தர்பால் ஜோடி 44.4 ஓவரில் 200 ரன்கள் எடுத்து விண்டீஸ் அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது.

  • மார்ச் 22, 2000 அன்று மீண்டும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இம்முறை தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு படுதோல்வியை கொடுத்தனர். இந்தப் போட்டியானது ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்திய அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஜோடியான கேரி கிர்ஸ்டன் மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் 29.2 ஓவரில் இந்தியாவை வீழ்த்தினர்.

  • நவம்பர் 25, 2005 அன்று தென்னாப்பிரிக்கா மீண்டும் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த முறை கொல்கத்தாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 188 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். ஸ்மித் மற்றும் ஆண்ட்ரூ ஹால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 189 ரன்களை இணைத்து இந்தியாவை எளிதாக வீழ்த்தினர்.

  • மும்பையில் ஜனவரி 14, 2020 அன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் டீம் இந்தியா 255 ரன்கள் எடுத்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியான வார்னர் மற்றும் ஃபின்ச் சதம் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தினர்.


சூர்யகுமார் யாதவ் இடம் கேள்வி? 


சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். வழக்கமாக 4வது இடத்தில் இறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தினால் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். அப்போது, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சூர்யா அடுத்தடுத்து முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதேபோல், தனது கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 9, 8, 4, 34 n,o, 6, 4, 31, 14, 0 மற்றும் 0 என்ற ஸ்கோரை பதிவு செய்துள்ளார். 


கணிக்கப்பட்ட அணிகள்:


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல் . ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி , முகமது சிராஜ்


ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் , ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் , மார்கஸ் ஸ்டோனிஸ் , சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா