மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய நான்கு இடங்களில் வேளாண் விற்பனை குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருத்தி நல்ல விலைக்கு விற்பனையானதால் அதனை நம்பி சென்ற ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட பருத்தி அறுவடைப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் பருத்தி 100 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது.
மேலும் இங்கு திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை வாங்கிச் செல்கின்றனர். குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் 1400 விவசாயிகள் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்பதற்காக தங்கள் பருத்தியை எடுத்து வந்திருந்தனர். அதிகபட்சமாக குவிண்டால் 7080 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5800 ரூபாய்க்கும் தனியார் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது.
கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக பருத்தி 8000 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை மோசடியில் ஈடுபடுவதாகவும், உரம் விலை மற்றும் கூலி ஆட்கள் செலவு, வண்டி வாகன செலவு ஆகியவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நஷ்டமாகும் விலையை தனியார் வியாபாரிகள் கேட்பதாக கூறி, ஏலத்தை பருத்தி விவசாயிகள் புறக்கணித்தனர். தொடர்ந்து குத்தாலத்தில் மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் இரவு 11 மணிக்கு சாலை மறியல் இரண்டாவது முறையாக நடைபெற்றது. மறுபடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை ஏடுப்பதாக வியாபாரிகளை அழைத்து பேசுவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பருத்தி விவசாயிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Ashwin On WTC Final: ”இறுதிப்போட்டியில் விளையாட ஆசைப்பட்டேன்.. ஆனால்” - மௌனம் கலைத்த அஸ்வின்