மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி ஒருவர் சொத்து பிரச்சனை தொடர்பாக மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரின் மனைவி 80 வயதான மூதாட்டி சாரதா.




இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்  தனது சொத்து பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்துள்ளார். இந்நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒதுக்குப்புறமாக சென்ற சாரதா திடீர் என்று தான் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி எறிந்து, அவரை  மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


Chennai Light Metro: சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது ‘லைட் மெட்ரோ ரயில்’ - எந்தெந்த பகுதிகள் தெரியுமா?




இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி சாரதாவின் கணவர் ராஜகோபாலுக்கு மயிலாடுதுறை உச்சவரம்பு அதிகாரியால்  0.57 சென்ட் நிலம் வழங்கப்பட்டதாகவும்,  தனது கணவர்  இறப்பிற்கு பிறகு  அந்த இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த பூராசாமி என்பவர் போலி  ஆவணம் தயார் செய்து  தனது உறவினர்கள் பெயரில்  பட்டா பெற்றுள்ளதாகவும், அந்த பட்டாவை ரத்து செய்து தனது பெயரில் நிரந்தரா பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்து வந்ததாகவும் , ஆனால் அந்த புகார்  மனு குறித்து இதுநாள் வரை எந்த நடவடிக்கையும்  அதிகாரிகள் எடுக்கப்படாத நிலையில் இதனால் மனமுடைந்த மூதாட்டி  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 


Sanatana Dharma: சனாதனத்தை ஒழிப்போம் என வாக்குறுதி கொடுத்து தேர்தலை சந்திக்க தயாரா..? உதயநிதிக்கு அண்ணாமலை சவால்!




மேலும் மூதாட்டி கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெற்றும், வருவாய்துறை அதிகாரிகள் பட்டா வழங்காமல் அலைய விடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  மகாபாரதி உத்தரவிட்டார். வயதான மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Sanatan Dharma Row: சனாதன விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர் மோடி.. உதயநிதிக்கு மேலும் நெருக்கடி.. நடந்தது என்ன?




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)