மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கு கரையில் 108 திவ்ய தேசங்களில் 22 -வது தலமும், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கல சாசனம் செய்யப்பட்ட, சந்திர சாப விமோசன தலமான இக்கோயிலில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.




நடைமுறை பேச்சு வழக்கில் இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதிகாரப்பூர்வமாக முழுவதும் மாற்றுவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அச்சடித்துள்ள ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் பேங்க் ஆப் பாரத் என மாற்றுவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். இதேபோல பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாற்ற பெரிய செலவு ஏற்படும். எனவே அது சாத்தியமில்லை. "ஒரே நாடு ஒரே தேர்தல்" பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு சாத்தியமில்லாதது. 


TTSE Exam: மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.1,500 வழங்கும் திறனறித் தேர்வு; அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்




தமிழ்நாட்டில் அரசியல் மேடையில் பேசப்படும் சனாதனம் என்பது நமது வழிபாட்டு முறை அல்லது கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல. சமுதாயத்தில் நிலவும் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றியது. சாதிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி கருத்துடன் ஒத்துப் போகிறேன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் தமிழிசை ஆகியவர்கள் புதிதாக சனாதனத்துக்கு கொடி பிடிக்கிறார்கள் என்றார். இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.


India World Cup Squad: இதுவே இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசம்... 2011 ஒப்பிட்டால் 2023 இந்திய அணி பலவீனம்தான்!




அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி அருகே உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 


'உத்தரபிரதேச சாமியாரால் உதயநிதி தலையை சீவி விட முடியுமா?’ - அமைச்சர் கே.என். நேரு சவால்




இக்கோயிலில் ஆயுள் ஹோமம் மற்றும் 60, 70, 80, மற்றும் 90 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். மேலும் பல்வேறு சிறப்புகளை இக்கோயிலில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வந்திருந்து கோ பூஜை, கஜ பூஜை செய்து சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார். கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி‌அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு  பூஜைகள் செய்து தரிசனம் செய்து வழிபட்டார்.