மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சூரக்காடு என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து 65 பயணிகளுடன் பாண்டிச்சேரி சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சூரக்காடு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே நான்கு வழிச்சாலை பணியில் ஈடுபட்டிருந்த கான்கிரீட் கலவை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென பக்கவாட்டு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வந்துள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர் லாரி மீது பேருந்தை மோதாமல் இருப்பதற்கு திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநர் அன்பரசன் மற்றும் காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் 7 பேர் உள்ளிட்ட பேருந்தில் வந்த 40 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயணிகளின் அலரல் சப்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததுடன், சீர்காழி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு 108 வாகனத்தின் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் உயர் சிகிச்சைக்காக இரண்டு பேர் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளுடன் அரசு பேருந்து கவிழ்ந்த சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சீர்காழி கோட்டாட்சியர் நாராணன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயணிகளை நேரில் பார்வையிட்டார் ஆறுதல் கூறினார்.
மேலும் விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலை நடைபெற்று வருவதால் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், இன்று பெரும் விபத்தாக பேருந்து கவர்ந்துள்ள நிலையில் மேலும் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் நடைபெறுவதற்கு முன்பாக, பாதுகாப்பான முறையில் சாலை விரிவாக்க பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக தெரிவித்தனர்.
Boris Becker: டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை-காரணம் என்ன?