டென்னிஸ் உலகில் தலைச் சிறந்த வீரர்களில் ஒருவர் போரிஸ் பெக்கர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெக்கர் 1985ஆம் ஆண்டு 17 வயதில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை வென்று அசத்தினார். அதன்பின்னர் அடுத்த ஆண்டும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியம் பட்டம் வென்று அசத்தினார். இதனால் டென்னிஸ் உலகில் இவர் பூம் பூம் பெக்கர் என்று அப்போது அழைக்கப்பட்டார். அதன்பின்னர் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரை 2 முறையும், யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை ஒரு முறையும் வென்றார். மொத்தமாக 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 1991ஆம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். தன்னுடைய ஓய்விற்கு பிறகு டென்னிஸ் பயிற்சி மற்றும் வர்ணனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது 2017ஆம் ஆண்டு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. அத்துடன் அந்த கடன் தொடர்பாக ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள வங்கிக்கு உரிய சொத்து விவரங்களை அளிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது. இந்த வழக்கை ஜெர்மனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்தச் சூழலில் இன்று அந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தண்டனையில் பாதி காலத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மீதி காலத்தை அவர் பிணையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஒருவரான பெக்கர் மீது இத்தகைய புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இவர் தன்னுடைய எஸ்டேட்வை காட்டி வங்கியிலிருந்து சுமார் 3 மில்லியன் யுரோ வரை கடன் வாங்கியுள்ளார். எனினும் அதை திருப்பி செலுத்தாமலும் வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக இவருடைய சொத்துகள் மற்றும் உடைமைகள் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் இவர் தன்னுடைய இரண்டு விம்பிள்டன் கோப்பை மற்றும் ஒரு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் ஆகியவற்றை அவர்களுக்கு அளிக்காமல் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் மீது ஜெர்மன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி பெக்கர் தன்னுடைய கோப்பைகளை ஏலத்தில் விற்க அளித்துள்ளார். அதன்பின்னர் இந்த கோப்பைகள் சுமார் 92 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வரை ஏலத்தில் விலை போகியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 70 கோடி வரை விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே 2002 ஆம் ஆண்டு இவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்