தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோழகிரிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அருகில் உள்ள பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி  வேலையை முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்து இருந்துள்ளார். தோழகிரிப்பட்டிக்கு முறையான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரமாக காத்திருந்தும் அந்த இளம்பெண்ணுக்கு பேருந்து கிடைக்கவில்லை.


அப்போது, அந்த இளம்பெண்ணுக்கு நன்கு தெரிந்த பக்கத்து ஊரான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கொடியரசன் இரு சக்கர வாகனத்தில் அந்த வழியே வந்துள்ளார். இளம்பெண்ணைப் பார்த்த கொடியரசன் தோழகிரிப்பட்டியில் விட்டுவிடுவதாக கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே கொடியரசன் பழக்கம் என்பதால் அவரை நம்பி அந்த இளம்பெண்ணும் அவரது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.




நகரத்தின் எல்லையை கடந்ததும் தோழகிரிப்பட்டிக்கு செல்லும் வழக்கமான பாதையில் செல்லாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளே சென்ற சாலையில் கொடியரசன் இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனால், இளம்பெண்ணுக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உடனே, ஏன் பாதை மாறி செல்கிறாய்? என்று கொடியரசனிடம் கேட்டுள்ளார். ஆனால், கொடியரசன் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை அதிகரித்ததுடன் ஆள் அரவமற்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர், சத்தம் போட்டு தனது நண்பர்களை அழைத்துள்ளார். அங்கே மறைந்திருந்த அவரது நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் வெளியில் வந்தனர். அவர்களை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


பின்னர், அவர்கள் நான்கு பேரும் இணைந்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணிடம் நடந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பின்னர், தோழகிரிப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு மிகவும் தாமதமாக சென்ற அந்த இளம்பெண் அழுதுகொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் நடந்த விஷயங்களை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.




பின்னர், அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் நியாயம் கேட்க சென்றபோது கட்டப்பஞ்சாயத்திற்கு வந்த இரண்டு பேர் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால், இளம்பெண்ணும் அவரது பெற்றோர்களும் அச்சத்திற்கு ஆளாகினர். இருப்பினும் கடுமையான மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தைரியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார்.




இதையடுத்து, காவல்துறையினர் கொடியரசனையும், அவரது நண்பர்களான சுகுமார், சாமிநாதன், கண்ணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குருங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, செல்லத்துரை, தமிழரசன் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணை நன்கு தெரிந்த நபர் நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண