தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து மாவட்டங்கள் முழுவதும் வெள்ள நீரால் மூழ்கியுள்ளது. 




இந்நிலையில் மாவட்டங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலரை நியமனம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ஹித்தேஷ் குமார் மக்வானா நேரில் ஆய்வு மேற்கொண்டார். 




பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஹித்தேஷ் குமார் மக்வானா, மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஆலங்குடி என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு கருங்கல் கொண்டு சரி செய்யப்பட்டதாகவும், தற்போது அதனை நிரந்தரமாக சரி செய்யும் திட்டம் தயார் செய்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


அவரு சாகல' துரிதமாய் செயல்பட்ட பெண் போலீஸ்! தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய சிங்கப்பெண்!


Keerthy Suresh | நடிப்பு மட்டுமல்ல.. இசையும்தான்.. வயலின் வாசிக்கும் கீர்த்தி ! உறுதிப்படுத்திய இசையமைப்பாளர்!


 


மேலும் தொடர்ந்து பேசியவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் வடிந்து வருவதால் வெள்ள பாதிப்பு நிலைமை விரைவில் சீரடையும் என்றும், அதேநேரம் மாவட்டத்தில் உள்ள 700 குளங்களில் 25 சதவீதம் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளதாகவும், தண்ணீர் வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை நீர்நிலைகளில் சேகரிக்க மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தார்.


Chennai Rains : சென்னையில் விடிய விடிய மழை.. தத்தளிக்கும் சாலைகள், நீச்சல்குளமான சுரங்கப்பாதைகள்!


Kanganaranaut | கங்கனா ரனாவத்தின் கல்யாண ஸ்பெஷல்..! திருமண சீக்ரெட்டை போட்டுடைத்த கங்கனா!