இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத், “ நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன். நான் என்னை அடுத்த 5 வருடங்களில் ஒரு தாயாகவும், மனைவியாகவும் இந்தியாவின் புதிய பாதையில் பயணிக்கும் ஒரு நபராக மாற்ற விரும்புகிறேன்” என்றார். 


இதனையடுத்து செய்தியாளர் அவரிடம், கங்கனாவின் கணவர் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், “ நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள் என்று பதிலளித்தார். மேலும் நீங்கள் காதலில் மகிழ்ச்சிகரமான இடத்தில் இருக்கீறீர்களா என்று கேட்டதற்கு, “ காதலில் அப்படியான ஒரு இடம் இல்லை.. ஆனால் ஆம்..” என்ற அவர், விரைவில் இது குறித்த தகவலை அறிந்து கொள்வீர்கள் என்றார். 




பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயம் ரவி நடித்த  ‘தாம் தூம்’ படத்தில் நடித்ததின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அண்மையில் ஜெயலலிதாவின் வாழ்கை பிண்ணனியை வைத்து உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார். தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் பிரதமர் இந்திரா காந்தி வாழ்கைப் பிண்ணனியை வைத்து உருவாக்கப்படும்  ‘எமெர்ஜன்ஸி’படத்தில் நடித்து வருகிறார்.


30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கங்கனா ரனாவத் மணி கர்னிகா, பங்கா உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவருக்கு நாட்டின் உயரிய விருதான  “பத்ம ஸ்ரீ” விருதும் வழங்கப்பட்டது. இதனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு வழங்கினார்.





 


தனது நடிப்புக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பேர் போனவர் கங்கனா ரனாவத். மேற்கு வங்க முதல்வர் மீது வைத்த குற்றசாட்டு, சுஷாந்த் சிங் இறப்புக்கு எதிராக பேசியது உட்பட பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.