கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.




watch video: கீழே விழுந்த துணியை எடுக்க மகனைத் துணியில் கட்டி மாடியில் இருந்து இறக்கிவிட்ட கொடூரம்!


நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்யது தள்ளுபடி பெறும் நபர்களின் விவரங்களை அரசு வெளிட்டது.




அடுத்தவர் மனைவியுடன் சல்லாபம் - கையும் களவுமாக கணவனிடம் சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 395 விவசாயிகள் நகைக் கடன் பெற்றுள்ளனர். இந்த சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் திமுகவை சேர்ந்த 10 விவசாயிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்து தரப்பட்டுள்ளது. மீதமுள்ள கீழையூர் நடுக்கரை, கிடாரங்கொண்டான் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நகைக்கடன் பெற்ற 385 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததோடு, நகை கடன் தள்ளுபடி செய்த நபர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. 


Local Body Election | குளத்தில் இருக்கும் வரைதான் மீனுக்கு சக்தி; தரையில் போட்டால் கருவாடு ஆகிவிடும் - அதிருப்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு எச்சரிக்கை


இதனை கண்டித்து கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டடம் முன்பு கீழையூர் நடுக்கரை, கிடாரங்கொண்டான் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கபாடி.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாய நகை கடன் பெற்ற 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.