இந்தியா முழுவதும் 76 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. அதனை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் சுகந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாட புதிய முயற்சியாக சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மயிலாடுதுறையில் உள்ள ‘பில்டிங் டாக்டர்’ என்ற நிறுவனம் கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு டிஜிட்டல் தேசிய கீதத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது.




அந்த தேசிய டிஜிட்டல் தேசிய கீத பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய கீத பாடலை நாடு முழுவதும் குரல் இசை மூலமும்,  இசைக்கருவிகள் பயன்படுத்தியும் பல்வேறு வகைகளில் வித, விதமாக வடிவமைத்து பகிர்ந்துள்ளனர். ஆனால் அவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக, மயிலாடுதுறையில் உள்ள பில்டிங் டாக்டர் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆதன்யோகி தயாரிப்பில், கட்டிடப் பணிகளுக்கு தேவைப்படும் கல், மண், ஜல்லி, கம்பி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி புதுமையான கோணத்தில் நவீன டிஜிட்டல் இசை மூலம் தேசிய கீத பாடலை வடிவமைத்துள்ளனர். 


Independence Day 2023 Special: நம்ம காஞ்சிபுரம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி தெரியுமா ? இதோ உங்களுக்கான பட்டியல்




இந்தப் பாடல் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பல்வேறு வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது. பில்டிங் டாக்டர் பணியாளர்களோடு இணைந்து மேடி என்பவர் இப்பாடலை இயக்கியுள்ளார். சாம் ஜோசப் இசை வடிவமைப்பு செய்துள்ளார். சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மயிலாடுதுறை பில்டிங் டாக்டர் உருவாக்கியுள்ள தேசிய கீத பாடல் கட்டுமானத்துறை பொறியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.


President Speech: பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: சுதந்திர தின உரையில் குடியரசு தலைவர் கோரிக்கை