1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு பெரும் போராட்டத்திற்கு பிறகே சுதந்திரம் கிடைத்தது. அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற இந்தியர்களின் தன்னலமற்ற தியாகங்களும், அவர்கள் வழிநடத்திய சுதந்திரப் போராட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.


77ஆவது சுதந்திர தினம் 


1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, டெல்லி செங்கோட்டையில் உள்ள லாஹோரி கேட் என்ற இடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அன்றுமுதல், ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றி, குடிமக்களுக்கு உரை நிகழ்த்து வருகின்றனர்.


நாட்டின் குடிமக்கள் ஒன்று கூடி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மிகுந்த உற்சாகத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.   சுதந்திரம் கிடைப்பதற்காக தன்னலம் இன்றி, பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் பல்வேறு காலகட்டத்தில்,  பல்வேறு வடிவிலான போராட்டத்தை முன் எடுத்தனர். தமிழ்நாட்டுக்கு என நீண்ட, பெருமை வாய்ந்த வரலாறு உள்ளது. நாட்டிலேயே மிகவும் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான்.


காஞ்சிபுரம் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள்


ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சிறு, சிறு பகுதிகளிலும் கூட சுதந்திர போராட்ட  வீரர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தனர். அந்த வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திரத்திற்காக போராடிய    தியாகிகளை குறித்து பார்க்க உள்ளோம்.


 1. தியாகி மார்க்கபந்து காரை காஞ்சிபுரம் 
 2 . தியாகி கே எஸ் பார்த்தசாரதி காஞ்சிபுரம்





 


3.  தியாகி எம் பி ரங்காராவ் காஞ்சிபுரம் 
 4. தியாகி ஆர் .கணேசன் பெரிய காஞ்சிபுரம் 


 5. தியாகி எம். ஜி .சக்கரவர்த்தி நாயக்கர் 
 6. தியாகி டாக்டர்  பி. எஸ் .சீனிவாசன் சின்ன காஞ்சிபுரம் 


 




 7. தியாகி நெல்லி கேசவ செட்டியார் காஞ்சிபுரம்   


8. தியாகி   எம் ராஜி நாயக்கர் ஈஞ்சம்பாக்கம் காஞ்சிபுரம் 
 9. தியாகி  குப்புசாமி முதலியார் மேல்மனப்பாக்கம் காஞ்சிபுரம்  
10. தியாகி ஜானகி அம்மாள் , உத்தரமேரூர் , காஞ்சிபுர
11.தியாகி டி ராஜி முதலியார் பிள்ளையார்பாளையம் காஞ்சிபுரம் 
12. தியாகி என் சொக்கலிங்கம் வாலாஜாபாத் காஞ்சிபுரம்




காஞ்சிபுரத்தை சேர்ந்த முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்து வருகின்றனர். பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அமைப்புகளில், சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு வந்தவர்கள். பல்வேறு அமைப்பு சார்பில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு,  இந்தியா விடுதலைக்காக போராடிய காஞ்சிபுரம் மண்ணின் மைந்தர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இவர்களை போன்று ஏராளமான சுதந்திர போராட்ட தியாகி சுதந்திரத்திற்காக, போராடி உள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தியாகி பல்வேறு வடிவங்களில் தங்களுடைய பங்களிப்பை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தாலே, இன்று இந்தியா சுதந்திர காற்று சுவாசித்து வருகிறது. 77 ஆவது சுதந்திர தினத்தில் அவர்களை நினைவு கூறி, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது நம்முடைய கடமையாகும்.