மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் சம்பத்குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9 -ஆம் தேதி மயிலாடுதுறையில் திருமணம் நடைபெற்றது. அதற்காக அவர் அச்சடித்த திருமண அழைப்பிதழில், அன்பளிப்பைத் தவிர்த்து, அதனை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திட வேண்டும் என ஜெயக்குமார் வாசகத்தை பதிவிட்டிருந்தார். இருப்பினும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அன்பின் காரணமாக மொய் அளிப்பவர்களை மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்த கேட்டுக்கொண்டார்.
Viral Video: கொட்டும் மழை... குதிரை சவாரி... விடாமல் உணவை டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்!
அந்த வகையில் வசூலான 83,000 ரூபாய் ரொக்கப்பணத்துடன், மேலும் 17 ஆயிரம் ரூபாயை சேர்த்து 1 லட்சம் ரூபாயை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியோருக்கு அவர் பிரித்து வழங்கினார். அது மட்டுமின்றி மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் எந்த ஒரு வரதட்சணை பெற்றுக்கொள்ளாத நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய் பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
போட்டித் தேர்வையே ரத்து செய்க; தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமியுங்கள்- அன்புமணி
பொதுவாக தமிழகத்தில் காலம் காலமாக வரதட்சணை வழங்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை, சீர்வரிசை, பைக், கார் என்று வரதட்சணையாக வழங்குவார்கள். அதுவும் பலர் தங்கள் வசதிக்கு மேல் கடன்பட்டு வரதட்சணை கொடுத்து விட்டு பின்னர் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். மேலும், வரதட்சணை கேட்டு மணப்பெண்ணை மணமகன் வீட்டார் கொடுமை செய்யும் சம்பவங்களும் தொடர்கதையாக நடந்து கொண்டு வருகிறது.
இதனால் இளைஞர்கள் மத்தியில் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் மகனின் திருமணத்தில் பெண் வீட்டாரிடம் வரதட்சணையும் பெறாமல், திருமணத்தில் வந்த பொய் பணத்தையும் முதியோர் காப்பகம், ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்