மக்கள் பணி செய்ய வந்த எனக்கு முதலில் கிடைத்தது சிறை தான்  என நாமக்கலில் நடந்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிகள் மாநாட்டில்  முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 


ஐம்பது ஆண்டுகளாக நான் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மக்கள் பணி செய்ய வந்த எனக்கு முதன் முதலில் கிடைத்தது சிறை தான். தமிழ்நாட்டின் முதல்வர் என்ற இந்த பொறுப்பு எனக்கு, தங்க தாம்பலத்தில் வைத்து தரப்படவில்லை. நேரடியாக மக்களைச் சந்தித்து மக்களிடத்தில் நல்ல எண்ணத்தினையும், நம்பிக்கையினையும் பெற்றதால் தான் இன்றைக்கு ஸ்டாலின் முதல்வர். தமிழகத்தினை மக்கள் திமுகவினை நம்பி கொடுத்திருக்கிறார்கள். அதனால் நாம் மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் மக்கள் பணி செய்ய வேண்டும். மிகவும் நினைவில் கொள்ள வேண்டியது நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது பதவி அல்ல; பொறுப்பு என்பதை உணர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். பெண் பிரதிநிகள் தங்களின் கணவர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிடக் கூடாது. மேலும் பெண் பிரதிநிதள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டவர்களாக, நிலத்தில் யாருக்கும் அஞ்சாமல் தன்னிச்சையாக இருந்து துணிவுடன் செயலாற்ற வேண்டும்.






அனைவரின் கருத்துகளையும் கேட்டு அவர் கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படுவதுதான் ஜனநாயகம், யாரும் எதையும் செய்யலாம் எனபது ஜனநாயகம் அல்ல.  நீங்கள் எப்போதும் ஜனநாயகவாதியாக இருத்தல் மிகவும் அவசியம். ஒழுங்கீனமும் முறைகேடும் தலை தூக்குமானால், நான் சர்வாதிகாரியாகக் கூட மாறி செயல்படுவேன். இந்த எச்சரிக்கை இங்குள்ள பிரதிநிகளுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் தான்.  நான் செல்லும் இடங்களெல்லாம் என்னைப் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மக்களுக்காக நான் திட்டங்கள் தீட்டுகிறேன், மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்பதால் தான். நீங்களும் மக்களுக்காக செயல்பட வேண்டும். பதவி பொறுப்புக்கு வருவது முக்கியமில்லை அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மக்களிடத்தில் பாராட்டையும் நம்பிக்கையினையும் பெற வேண்டும். நீங்கள் பெறுவீர்களா? இத்தகைய நற்பெயரினை பெறுவீர்களா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியும் எழுப்பியுள்ளார்.   உள்ளாட்சி பொறுப்புக்கு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமை. ஒற்றுமை இல்லாத இடத்தில் மக்கள் பணிகள் முடங்கிப் போய்விடும். ஒற்றுமையாக இருந்து மக்கள்ப் பணி செய்யுங்கள்.  வெறுமனே சாலைகள் போடுவதோ, பாலங்கள் அமைப்பதோ, சாக்கடைகளை சுத்தம் செய்வதோ மட்டும் உங்கள் கடமைகள் அல்ல. சமூகத்தில் சமத்துவ சாலைகளை அமைப்பதும் உங்கள் கடமைதான். சகோதரத்துவ பாலங்கள் அமைப்பது உங்கள் கடமைதான். சமூகத்தின் கழிவுகளையும் அகற்றுவதும் உங்களின் கடமை தான் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண