Watch Video: வந்த இடத்தில் நொந்துபோன TTF! சோகத்திலும் மனிதாபிமானம்! BGMபோட்டு அண்ணனை வாழ்த்தும் தம்பிகள்!

முன்னதாக தன் பிறந்த நாள் மீட் அப் குறித்து TTF வாசன் யூடியூபில் பகிர்ந்த வீடியோவில் தனது விலை உயர்ந்த ஹெல்மெட்டை இந்த பிறந்தநாள் மீட் அப்புக்குப் பிறகு காணவில்லை என டிடிஎஃப் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

TTF வாசன்... மூன்று நாள்களுக்கு முன் இந்தப் பெயரைக் கூறி இருந்தால் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது.

Continues below advertisement

பிரபல யூடியூபரான TTF வாசன் தான் நடத்திய ஒரே ஒரு பிறந்தநாள் மீட் அப் மூலமும், அதில் கூடிய கூட்டத்தாலும் ஓவர் நைட்டில் பாப்புலராகி உள்ளார். இளைய தலைமுறையினர் தவிர்த்து இவர் யார், என்ன செய்து கொண்டிருக்கிறார், எங்கிருந்து இப்படி ஒரு படை வந்தது எனப் புரியாமல் குழம்பி சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.

27.7 லட்சம் ஃபாலோயர்ஸ்!

 Twin Throttlers எனப்படும் யூடியூப் பக்கத்தை நடத்தி 2K கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைய தலைமுறையினரின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் TTF வாசன் தான் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தையும் செய்திகளையும் ஆக்கிரமித்துள்ளார்.


27.7 லட்சம் சப்ஸ்கிரைபர்களைகளுடன் தனது லட்சங்கள் மதிப்புள்ள பைக்கில் சாகசங்கள், ரேஸிங் என வலம் வரும் 23 வயது TTF வாசன் கோவையைச் சேர்ந்தவர். மேலும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 7 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களுடன் வலம் வருகிறார்.

முன்னதாக நேற்று முன் தினம் (ஜூன்.01) கோவை, மேட்டுப்பாளையத்தில் தன் ரசிகர்களை சந்திக்க அழைப்பு விடுத்த இவரைப் பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததை அடுத்து காவல் துறையினர் வந்து இவரை அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்தே டிடிஎஃப் வாசன் செய்திகளை ஆக்கிரமிக்கத்த் தொடங்கினார்.

காணாமல் போன ஹெல்மெட்


இந்நிலையில், முன்னதாக தன் பிறந்த நாள் மீட் அப் குறித்து TTF வாசன் யூடியூபில் பகிர்ந்த வீடியோவில் தனது விலை உயர்ந்த ஹெல்மெட்டை இந்த பிறந்தநாள் மீட் அப்புக்குப் பிறகு காணவில்லை என டிடிஎஃப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள டிடிஎஃப் வாசன், ”என்னுடைய ஹெல்மெட்டை காணோம். எனக்கு பரிசாக வந்த சில பொருட்களையும் காணோம். யாரும் திருடிவிட்டார்கள் என்று கூற மாட்டேன். யாராவது என் நியாபகார்த்தமாக ஹெல்மெட்டை எடுத்துச் சென்றிருக்கலாம். என்னதான் இருந்தாலும் அத்தனைக் கூட்டத்தில் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது என் பொறுப்பு. அவர்களை அதனால் குறை சொல்ல மாட்டேன்” என்று பேசியுள்ளார்.

 

TTF வாசன் செயலால் நெகிழும் ஃபாலோயர்ஸ்

TTF வாசன் என்பவரும் அவருக்கென இப்படி  ஒரு இளைஞர் படையும் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வரும் பலரும் இவர்கள் குறித்து மீம்ஸ், ஆச்சரிய மற்றும் கேலிப் பதிவுகள் பகிர்ந்து வரும் நிலையில், ஹெல்மெட் காணாமல் போயும் டிடிஎஃப் அண்ணா மனிதநேயத்துடன் யாரையும் குறை சொல்லாமல் தானே இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார் என நெகிழ்ந்து வருகின்றனர். நெகிழ்ச்சியோடு நின்றுவிடாமல் செல்போனில் இருக்கும் எடிட் ஆப்களிள் டிடிஎப் வீடியோவை அள்ளி போட்டு பிஜிஎம்களை கோர்த்துவிட்டு வீடியோக்களை அள்ளி வீசி வருகின்றனர். 

Continues below advertisement