திராவிடர் கழகத்தை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்து மக்கள் கட்சி இன்று நடத்துவதாக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டாட்சியரின் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை  மாவட்ட மண்டல செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியினர் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார் ‌. 


அய்யாவையனாறு ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - அச்சத்தில் மயிலாடுதுறை மக்கள்




அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதீனங்களின் பட்டணப் பிரவேசம் போன்ற இந்து மக்களின் வழிபாட்டு முறைகளில் தொடர்ச்சியாக தலையிட்டு இந்து மக்களின் மனதை புண்படுத்தும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும். அதேபோன்று பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை கிறிஸ்தவர்கள் அபகரிக்கின்றனர். பட்டியலினத்துக்கு ஒதுக்கப்பட்ட சென்னை மேயர் தேர்தலில் கிரிப்டோ கிறித்தவரான பிரியா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். 




ஆதிதிராவிடர் நலத்துறை ஜாதி சான்றிதழ் வழங்கும்போது கவனமுடன் செயல்பட வேண்டும். பட்டியல் இன மக்கள் சலுகைகளை மோசடி செய்யும் கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அண்மையில் சிவராத்திரி விழா நடத்த அறநிலையத்துறையின் முயற்சிக்கு கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை நேரில் சந்தித்து இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்தது கண்டத்துக்கு உரியது என்றார். 




watch video | மதுரையில் 45 சவரன் தங்கநகை கொள்ளை- ரோந்து பணிகளை அதிகப்படுத்த போலீஸ் திட்டம்


மேலும் தொடர்ந்து பேசியவர், பதவியேற்றவுடன் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது உள்ளாட்சித் தேர்தலின் முடிவுக்குப் பிறகு பால் விலை, மதுபான விலை ஆகியவற்றை உயர்த்தியுள்ளார். மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்த போவதாக தகவல்கள் வருகின்றன. 




மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் விலைவாசி உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழக ஆளுனருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. ஆளுனர் பதவி என்பது அரசியல்சான ரீதியாக முக்கியமான பதவி, அப்பதவிக்கு அவமரியாதை செய்யும் விதத்தில் செயல்படும் தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இது முதல்வரின் கவனத்திற்கு தெரிந்து நடக்கிறதா? என்று தெரியவில்லை. தமிழக ஆளுனருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் போது, இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.