மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் அருகே அய்யாவையனாறு பாசன ஆறு அமைந்துள்ளது. இந்த ஆறு இப்பகுதி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான பாசன ஆறாக விளங்கி வருகிறது. மேலும் இந்த ஆற்றில் விவசாயிகள் விவசாய பணியின் போது கால்நடைகளுக்கு ஆற்றில் நீர் அருந்தவும் செய்து வருகின்றனர்.


அரசிடம் சமர்பிக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் செயல்திட்ட அறிக்கை - விரைவில் பணிகளை தொடங்க அதிகாரிகள் தீவிரம்




இந்நிலையில் இந்த ஆற்றின் மேற்குப் பகுதி கரையோர பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்வதாக கூறப்படுகிறது. மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ஏற்றிய நூற்றுக்கணக்கான கவர்கள் என மருத்துவ கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளது. 


ABP Exclusive: திருச்சியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கபடும் - மேயர் அன்பழகன் ABP நாடுவுக்கு பிரத்தியேக பேட்டி




இதனால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றாலோ அல்லது திடீர் மழை பெய்தாலோ இந்த கழிவுகள் எல்லாம் ஆற்றில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அந்துள்ளனர். எனவே பாசன ஆற்றின் கரையோரம் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உடனடியாக மருத்துவ கழிவுகளை அகற்றவும்  அய்யாவையனாறு கரையோரப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




Graduate Kills Self : கட்டாய திருமணத்தால் துடித்த மாணவி.. கனவுகள் கலைந்ததால் மனம் உடைந்து தற்கொலை..


மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வைத்தீஸ்வரன் கோயில் ஒரு அரசு மருத்துவமனையும், இரண்டு தனியார் கிளிக்கள் மட்டுமே செயல்படும் நிலையில், இது போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டிய நபர்களை எளிதில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும், உடனடியாக சுகாதார துறையினர், காவல்துறையினருடன் இணைந்து இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, தவறு செய்யும் மருத்துவமனைகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே மேலும் இது போன்ற செயல்கள் ஈடுபடும் மற்ற மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கையாக கருதி மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அகற்றுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.