மதுரையில் கடந்த சில நாட்களாகவே திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார்.
மதுரை வடக்கு ஆவணி மூல வீதி தியாகி தாயம்மாள் பகுதியை சேர்ந்தவர் விமலநாதன். இவர் அதே பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குடும்பத்தினரோடு விமலநாதன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 அரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் வீடு திரும்பிய விமலநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடு போனதை அறிந்து திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து 45 அரை சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விமலநாதன் வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மராமத்து பணி நடந்து வந்த நிலையில், 15க்கும் மேற்பட்ட கட்டிட பணியாளர்கள் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. மராமத்து பணி காரணமாக சி.சி.டி.வி கேமராக்கள் அகற்றப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் வீட்டில் வேலை பார்த்தவர்களிடம் முதல்கட்டமாக விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கொசவப்பட்டி அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு திருவிழா - சீறிய காளைகளை சீற்றத்துடன் அடக்கிய காளையர்கள்