தஞ்சாவூர்: கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 21 சுற்றுலா பயணிகள் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இன்று தஞ்சைக்கு வந்தனர்.
சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு நமது கலாச்சாரங்களை அறிந்து வருகின்றனர்.
அதன்படி கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 21 சுற்றுலா பயணிகள் இந்தியாவில் 1500 கி.மீ மேல் ஆட்டோவில் பயணித்து கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்தியாவின் பாராம்ரிய கலாச்சாரம், பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளவும் கடந்த 28-ந்தேதி சென்னைக்கு வந்தனர்.
இதையும் படிங்க: காண்டம், சிப்ஸ், பால்… புத்தாண்டுக்கு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவை என்ன தெரியுமா?
பின்னர் அன்றைய தினம் சென்னையில் இருந்து 9 ஆட்டோக்களில் புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்றனர். வெளிநாட்டினர் தாங்கள் பயணிக்கும் ஆட்டோக்களை தாங்களாகவே ஓட்டி செல்வது குறிப்பிடதக்கது. தொடர்ந்து புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து அங்கிருந்து ஆட்டோக்களில் புறப்பட்டு கடலூர் வெள்ளி கடற்கரையை பார்த்தனர். பின்னர் வரும் வழியில் சீர்காழி வைத்தீஸ்வரன்கோயிலை பார்த்தனர். தொடர்ந்து நேற்று இரவு தஞ்சையை வந்தடைந்தனர்.
தஞ்சையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர். அவர்களுக்கு ஓட்டல் நிர்வாக இயக்குனர் அந்தோணிச்சாமி நாடார் , எக்ஸ்கியூட்டிவ் இயக்குனர் செபாஸ்டின் ராஜேஷ் ஆகியோர் அறிவுறுத்தலின்படி ரெஸ்டாரன்ட் மேலாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
இன்று காலை பரிசுத்தம் ஓட்டலில் இருந்து 21 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 9 ஆட்டோக்களில் புறப்பட்டு பெரியகோவிலுக்கு சென்றனர். அங்கு பெரியகோவிலை சுற்றி பார்த்து வியந்ததோடு கட்டிடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பார்வையிட்டு மெய்மறந்து ரசித்தனர்.
முன்னதாக தஞ்சையில் தங்கிருந்த பரிசுத்தம் ஓட்டல் முன்பும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் 3 வெளிநாட்டினர் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு ஆட்டோக்களில் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டைக்கு சென்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை பார்வையிட சென்றனர். இதையடுத்து அங்கிருந்து மதுரைக்கு செல்லும் அவர்கள் அங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். தொடர்ந்து மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக வருகிற 6-ந்தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
வெளிநாட்டினரின் பயணங்களுக்கான ஏற்பாடுகள், பயண திட்ட ஏற்பாடுகளை டிராவல்ஸ் சயின்ஸ்டிட் பொதுமேலாளர் பிரின்சிலி, நிர்வாகி ஜோதிஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.