தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தஞ்சையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் 250க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர்.


திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.  இதேபோல் தஞ்சையில் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் மாநகர கழக செயலாளர் வழக்கறிஞர் என்.எஸ்.சரவணன், கழக அமைப்பு செயலாளர் ஆர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அறிவுடைநம்பி , கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் திருஞானம் ,
 விவசாய பிரிவு துணைச் செயலாளர் ஜெகதீசன் ,மாவட்ட அவை தலைவர் நாகராஜ் ,மாவட்ட பொருளாளர் அன்புச்செல்வன் ,பகுதி கழக செயலாளர்கள் மனோகரன், புண்ணியமூர்த்தி ,கரந்தை பஞ்சு, சதீஷ்குமார் ,தஞ்சை ஒன்றிய கழகச் செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ,மகளிர் அணி சித்ரா அங்கப்பன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்,


தடையை மீறி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அதிமுகவினர் 250க்கும மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.