விழுப்புரம் மாவட்டத்தில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, மின்சாதனங்களை பாதுகாப்பாகவும், கவனமாகவும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:


விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் மின் சிக்கன வார விழா கடை பிடிக்கப்படுகிறது. பொது மக்கள், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த, வீடுகளில் குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தலாம். முழு அளவில் வெளிச்சம் பெறுவதற்கு, மின் விளக்குகளை சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.


அதிக ஸ்டார் குறியீடு மின் சாதனங்களை பயன்படுத்தவதும், பிரிட்ஜ் உள்ளே சேரும் ஐஸ் கட்டியினை அடிக்கடி நீக்கம் செய்து பயன்படுத்தவும், ஏ.சி., அறையை நன்கு மூட வேண்டும். இதே போல், மின் சிக்கனத்திற்கு ஏ.சி., 25 டிகிரி சென்டி கிரே ட் அளவில் வைத்து பயன்படுத்தலாம். மின்சார ஹீட்டர்களுக்கு பதிலாக சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம்.


மின் பாதுகாப்பிற்கு, ஒவ்வொரு வீட்டிலும் சரியான எர்த் பைப் போட வேண்டும், வீடுகளில் மெயின் சுவிட்ச் போர்டில் சர்கியூட் பிரேக்கர் பொருத்த வேண்டும், ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்த மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். மின் சாதன சுவிட்சுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்களின், ஸ்டே ஒயர்களின் அருகே செல்லக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: காண்டம், சிப்ஸ், பால்… புத்தாண்டுக்கு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவை என்ன தெரியுமா?


மின்சார பல்புகளை பற்றி பார்ப்போம்:


முன்பு நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பல்புகள் அதிகம்,இன்கேன்டசன்ட் லைட் என்ற வகையை சார்ந்தவை. தற்போது எல்இடி, சிஎஃப்எல் முதற்கொண்டு பல்வேறு வகையான பல்புகள் வந்துள்ளன. இவைகளின் எவற்றை பயன்படுத்தினால் மின்சார சிக்கனம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதை பார்ப்போம்.


நாம் சாதாரணமாக உபயோகப்படுத்தும் குண்டு பல்ப் எனப்படும் இன்கேன்டிசன்ட் பல்புகளை விட மற்ற வகை பல்புகள் குறைந்த அளவு மின்சார சிக்கனத்தை தரவல்லது. உதாரணமாக 60 வாட் குண்டு பல்பு ஒரு வருடத்திற்கு 3285 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை உபயோகப்படுத்துகிறது என்றால் 13 லிருந்து 15 வார்ட்ஸ் உடைய சிஎப்எல் பல்பு 767 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை உபயோகிக்கிறது எல்இடி பல்பு இதை விட குறைவான மின்சாரத்தை மட்டுமே உபயோகிக்கும். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இன்னமும் கூட குண்டு உபயோகிக்கும் வழக்கம் இருக்கிறது கவனிக்க வேண்டியது.


எல்இடி மற்றும் குண்டு பல்புகளில் பாதரசம் போன்ற வேதிப்பொருட்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஃப்எல் பல்புகளில் ஒன்று முதல் ஐந்து மில்லிகிராம் வரையில் பாதரசம் இருக்கும் எனவே இந்த வகை பல்புகளை உபயோகப்படுத்துபவர்கள் இதன் ஆயுட்காலம் முடிந்ததும் சாதாரண குப்பைகளில் போடாமல் ஒரு குறிப்பிட்ட கவரில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.


இதையும் படிங்க: என்னங்க சார் இது.. கோயில்ல இப்படி பண்ணலாமா ? கொதிக்கும் பக்தர்கள்.. காஞ்சிபுரத்தில் நடப்பது என்ன ?


கரியமில வாயுவை பொதுவாக பல்புகள் எரியும் போது வெளியிடும் இத்தகைய மேல வாயுகளின் வெளியீடு பழைய குண்டு பல்புகளில் அதிகம் என்பது கவனிக்க வேண்டியது.எல்லா வகை பருவ காலங்களிலும் எல்இடி பல்புகள் ஸ்விட்ச் போட்டவுடன் எரியும் திறன் கொண்டதாக இருக்கும். மற்ற இரண்டு பல்புகளின் விலையை விட எல்இடி பல்புகளின் விலை அதிகம் என்பது இருப்பினும் இவற்றின் ஆயுட்காலமும் அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.தற்போது அழகு வேண்டி வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிக அளவு அலங்கார விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன இவைகளை தேவையான போது மட்டும் உபயோகப்படுத்தி மற்ற நேரங்களில் உபயோகிக்காமல் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு இவற்றின் ஆயுள் காலமும் நீளும் மின்சார சிக்கனமும் இருக்கும்.


விற்பனைக்கூடங்களில் நுழைவாயிலில் அதிக அளவுக்கு விளக்குகள் உபயோகப்படுத்தப்படுகின்றன இவை மக்களை தங்கள் பக்கம் கவருவதற்காக என்றாலும் கூட கண்ணை கூசும் தேவையற்ற விளக்கங்கள் எரிச்சலை ஏற்படுத்தும். கண்ணுக்கு குளிர்ச்சி வழங்கும் வண்ண பலகையில் அளவான விளக்குகளை பொறுத்தியிருந்தால் நமக்கும் மின்சாரம் மிச்சம் வாடிக்கையாளரையும் எளிதாக கவர முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தற்போது அதிகப்படியான வீடுகளிலில் எப்பொழுதும் ஏர் கண்டிஷனர் உபயோகிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். வீட்டில் இருந்து பணி புரியும் மென்பொருள் பொறியாளர்கள் இத்தகைய பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தால் நல்ல பிராணவாயு கிடைக்கும் மேலும் மின்சாரமும் பெரிய அளவிற்கு சிக்கனமாகும் என்பதை கவனிக்க வேண்டும்.