ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்துக்காக இந்தியர்கள் அதிகம் வாங்கியவை என்னென்ன தெரியுமா?
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உறவுகளும் நண்பர்களும் பிறருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ந்து வருகின்றனர். இந்தியாவும் 2025ஆம் ஆண்டை கடந்த இரவில் குதூகலத்துடன் வரவேற்று, கொண்டாடித் தீர்த்தது. வீடுகளிலும் வெளியிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்த நிலையில், பிரபல இ காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்க் இட் மற்றும் ஸ்விகி ஆகியவற்றில் இந்தியர்கள் அதிகம் வாங்கியது என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தது என்ன? (What Indians ordered on New Year’s Eve 2024)
எல்லோரும் எதிர்பார்த்தது போல, ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் நிறையப் பேர் நொறுக்குத் தீனிகளையே அதிகம் வாங்கி இருக்கின்றனர். குறிப்பாக இரவு 8 மணி அளவில், , Blinkit செயலியில், ஆலு புஜியா எனப்படும் உருளைக்கிழங்கு நூடுல்ஸ் பாக்கெட்டுகள் 2.3 லட்சம் விற்றுத் தீர்ந்தன.
அதேபோல Swiggy Instamart செயலில் 7.30 மணி அளவில் ஒரு நிமிடத்தில் 853 ஆர்டர்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதேபோல பால், சிப்ஸ், சாக்லேட், திராட்சை, பனீர் ஆகியவை அதிகம் தேடப்பட்டு இருக்கின்றன.
அதேபோல ஐஸ் க்யூப்களும் குளிர்பானங்களும் அதிகம் தேடப்பட்டவையாக உள்ளன. பிளிங்க் இட் செயலில் நேற்று இரவு 8 மணிக்கு, 6,834 பாக்கெட் ஐஸ் க்யூபுகள் வாங்கப்பட்டுள்ளன.
1.2 லட்சம் பாக்கெட் காண்டம்
அதேபோல, டிசம்பர் 31 மாலையில் ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் 4,779 பாக்கெட் காண்டம்கள் விற்றுத் தீர்ந்தன. பிளிங்க் இட் செயலியும் காண்டம் விற்பனை அதிகரித்ததாக அதன் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா தெரிவித்துள்ளார். 1.2 லட்சம் பாக்கெட் காண்டம்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.