ஆண்டுதோறும் தமிழக கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் மழை, வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தாங்களே எவ்வாறு காத்துக் கொள்வது என்பது பற்றி அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி ஒத்திகையை செய்து காண்பிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் தேசிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது. 




Cyclone Asani: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்


அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த டெபுட்டி கமெண்டர் வைத்தியலிங்கம் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் இணைந்து பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 




Anna University: அண்ணா பல்கலை. கட்டண உயர்வு வாபஸ்; மீண்டும் நேரடி பொறியியல் கலந்தாய்வு? - அமைச்சர் பொன்முடி தகவல்


கடலில் சிக்கியவர்களை மீட்கும் விதங்கள் குறித்தும் நவீன உபகரணங்கள் முதல் ஆபத்துக்காலத்தில் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை செய்வது, ஆபத்து காலங்களில் தங்களைத் தாங்களே எவ்வாறு காத்துக்கொள்வது என்பது உள்ளிட்ட, பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக பேரிடர் காலங்களில் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கேன்கள் முதல் பயனற்ற கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வாழை மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஆபத்தில் உள்ள அவர்களை மீட்பது குறித்து விளக்கமளித்தனர்.  




இலங்கையில் வெடிக்கும் வன்முறை; தப்பிக்கும் சிறைக் கைதிகள் - இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய உளவுத்துறை


அதேபோல் ஆழ்கடலில் சிக்கியவர்களை ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் மீட்பது குறித்து விளக்கம் தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் வருவாய்த்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் பூம்புகார், வாணகிரி கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியை ஒத்திகை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.