மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராம் இந்திரா நகரை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் 21 வயதான அபிமணி. இவர் சீர்காழியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
Asia Cup Hockey: 13 ஆண்டுகள்.. ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் தமிழக வீரர்கள் - வாழ்த்து கூறிய முதல்வர்!
இந்நிலையில் அபிமணி இயற்கை உபாதை கழிப்பதற்கு வீட்டின் அருகேயுள்ள வயல் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த அபிமணி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் அபிமணி மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.
Crime: குளிர்பானத்தில் மயக்க மருந்து... பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: வசமாக சிக்கிய வாலிபர்!
அங்கு அபிமணியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், மற்றும் மின் வாரிய பொறியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் விபத்து நேரில் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சீர்காழி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வெடிக்கும் வன்முறை; தப்பிக்கும் சிறைக் கைதிகள் - இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய உளவுத்துறை
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சீர்காழி பகுதிகளில் இதுபோன்று மின் கம்பி அறுந்து விழுந்து ஏற்படும் விபத்தால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும், பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாகவும், மேலும் சில இடங்களில் மின் மாற்றிகள் குழந்தைகள் கைகளுக்கு எட்டும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டின் முன்பே மிகவும் ஆபத்தான முறையில் மின்மாற்றி மிகவும் தாழ்வான அமைத்துள்ளனர்.
Israel: அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: பத்திரிகையாளர் ஷீரின் அபு சுட்டு கொலை
இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் சீர்காழி மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்கில் செயல்பட்டு, சரியான முறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாதது இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமென குற்றச்சாட்டை தெரிவித்தனர்.