மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது 28 வயதான  மகன் கார்த்திக்,  இவர் சீசெல்ஸ் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கேசியராக கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விடுமுறைக்காக ஊர் திரும்பிய கார்த்தி, கொள்ளிடம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகள் புவனாவை திருமணம் செய்துள்ளார். 




குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - கல்வி அதிகாரி அதிரடி நடவடிக்கை


இதனை அடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மீண்டும் சீசெல்ஸ் நாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியருடன் பிரச்சினை நடப்பதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தனது தந்தைக்கு போன் செய்து  நலம் விசாரித்துள்ளார்.


இந்நிலையில், தொலைபேசியில் நலம் விசாரித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீசெல்ஸ் நாட்டில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கார்த்தி குடும்பத்தாரை தொடர்பு கொண்டு  உங்களது மகன் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 




Vladimir Putin: ரஷ்ய அதிபர் புடின் உடல்நிலை மோசம்? பரவும் புதிய தகவல்கள்.. வைரலாகும் வீடியோ!


இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாங்கம்  தனது மகன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும், சூப்பர் மார்க்கெட்டில் ஏற்கனவே சக ஊழியருடன் பிரச்சினை இருந்ததால் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும். மேலும், உடலை தாயகம் கொண்டு வந்து வீட்டில் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தனது மகன் சாவுக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர். 




திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உயிரிழந்த நபரின் மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டில் வேலை வாய்ப்புகள் இன்றி அயல்நாட்டுக்கு செல்லும் இளைஞர் பலரும் பணி பாதுகாப்பு இல்லாத சூழலில் பணி புரிவதும், இதனால் அவ்வப்போது பல உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு, இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் நபர்களுக்கு ஒலிய பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.