திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பள்ளியில் படித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் என்பதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள், உறவினர்கள், அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குழந்தைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக அரசு பிரத்யேக தொலைபேசி எண்ணான 1098 என்னை அறிமுகப்படுத்தி நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வண்டாம்பாளை ஸ்ரீ சிவசக்தி நகரில் வசித்து வரும் சாமிநாதன் என்பவரின் மகன் 42 வயதான பிரபுதாஸ் கால்நடைகளுக்கு தனியார் செயற்கை முறை கருவூட்டல் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். 




இந்தநிலையில் பிரபுதாஸ் பணிக்கு சென்ற பொழுது நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் பிரபுதாஸ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். அதே போன்று திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள புனவாசல் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் 25 வயதான கோபி வெல்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். ரைஸ்மில் கட்டுமான பணியில் வெல்டராக பணிபுரிய வெளியூரில் சென்று வேலை பார்த்து வந்த அவர் இரண்டு வார விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். 




இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ள 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபி ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் தாயார் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு என பிரத்யேகமான போக்சோ சட்டம் என்கிற ஒன்றை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண