குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - கல்வி அதிகாரி அதிரடி நடவடிக்கை

பின்னர் காலை 9.05 மணியளவில் தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து பள்ளியை தாமதமாக திறந்தனர்.

Continues below advertisement

விழுப்புரம் அருகே மாணவர்கள் காத்திருந்த விவகாரத்தில் குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காத தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

Continues below advertisement

விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள்மலர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 109 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பொய்யப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. காலை 9 மணி ஆகியும் ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளி திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தன.

மேலும் படிக்க: திரை தீப்பிடிக்கும்..! விக்ரம் படத்தின் போது தீப்பற்றிய திரை! அலறியடித்து ஓடிய கூட்டம்!

இதனால் நீண்ட நேரம் பள்ளிக்கு வெளியே காத்து நின்ற மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் யாரும் வராததாலும், பள்ளி திறக்கப்படாததாலும் பெரும் குழப்பமடைந்தனர்.  சிலர், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிச்சென்றனர். பின்னர் காலை 9.05 மணியளவில் தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து பள்ளியை தாமதமாக திறந்தனர். அதன் பிறகு வீடு திரும்பியிருந்த மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியது.

மேலும் படிக்க: விழுப்புரம் : முதல் நாளே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குத் திரும்பிய மாணவர்கள்.. நடந்தது இதுதான்..

Video : 15 Years of Shivaji : வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டாரின் `சிவாஜி’ தி பாஸ்.. இதுவரை வெளிவராத மேக்கிங் வீடியோ

உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு, தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் விளக்கத்தை கேட்டறிந்து எச்சரித்தார். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியை திறக்காத காரணத்திற்காகவும், குறித்த நேரத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்காத காரணத்திற்காகவும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்மலரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement