மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் என்பவரின் மகன் 28 வயதான ஜோஸ்வா. ஓட்டுநராக வேலைபார்த்து வந்த இவர், அருகில் உள்ள திருவாரூர் மாவட்டம் துலாவூரை சேர்ந்த 27 வயதான சவுதியா என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக  ஆசைவார்த்தை கூறி ஜோஸ்வா, சவுதியாவுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 


ஜனாதிபதி தேர்வு எப்படி நடக்கும்? யார் வசம் எத்தனை ஓட்டுகள் உள்ளது? யார் நினைத்தது நடக்கும்? விரிவான அலசல்!




இந்நிலையில், சவுதியா தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஜோஸ்வா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சவுதியா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். சவுதியா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலை காவலர்கள்  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழித்தல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்து கோர்ட்டிர் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


ICC Test Ranking: பேட்டிங், பவுலிங்கில் படு வீக்! ஆல்ரவுண்டரில் ஆதிக்கம்..இந்தியாவும் ஐசிசி ரேங்க் பட்டியலும்!



இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்போதைய நவீன காலகட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அனைவருக்கும் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் செல்போன்கள், மடிக்கணினி போன்ற இணையதள பயன்பாடு, பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு வழி என்றாலும், அதனை இன்றைய இளைய சமூகம் பெரும்பாலானோர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.


Crime: சொத்து மீது ஆசை... கொலை செய்த குடும்பம் - தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள்..!


அதன் பயனாக படிக்கும் பள்ளி கல்லூரி இளைய பருவத்திலேயே பலரும் காதல் வயப்படுவதும், அதனால் தடம்புரண்டு தவறான வழிகளுக்கு செல்லும் சூழ்நிலை மிக அதிக அளவில் இருந்து வருகிறது. செல்போன்களை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம் என்ற சூழல் தற்போது எழுந்துள்ளதால், அவற்றிலிருந்து மாணவர்களே தள்ளி வைப்பது என்பது முடியாத காரியமாக திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் செல்போன் இணையதள பயன்பாட்டை நாளையே பல இளைய தலைமுறையினர் தவறான வழிக்கு சென்று விடுகின்றன. இதனை சரிசெய்ய அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உளவியல் பாடங்களும், உளவியல் மருத்துவரையும் நியமனம் செய்து, மாணவர்களை சிறுவயது முதலே நல்வழி படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.