இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நேற்று முன் தினம் விலகியுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014-ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். 


Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!


தீடிரென நேற்று முன் தினம் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி விலகல் பலரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர். 


இந்நிலையில் விராட் கோலியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் முகமது அமீர்  தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கோலியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 


 










அதில், “என்னைப் பொறுத்தவரை கோலி கிரிக்கெட்டில் வரவிருக்கும் தலைமுறையின் உண்மையான தலைவர், ஏனென்றால் நீங்கள் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் தருகிறீர்கள். தொடர்ந்து மைதான ஆடுகளத்திலும் ஆடிக்கொண்டே இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 


முன்னதாக, கடந்த ஆண்டு முகமது அமீரிடம் தனியார் செய்தி நிறுவனம் உங்களை பொறுத்தவரை சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அமீர், என்னை பொறுத்தவரை இந்த சகாப்தத்தில் சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான். ஒரு பந்துவீச்சாளராக எனக்கு தெரியும் அவருக்கு பந்து வீசுவது எவ்வளவு கடினம் என்று என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண