ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் அமேசான் தளம் குடியரசு தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகையை அறிவிக்கும். அதேமாதிரியான சலுகையை அமேசான் நிறுவனம் இந்தாண்டும் அறிவித்துள்ளது. கிரேட் ரீபப்ளிக் டே சேல் என்ற பெயரில் இன்று(ஜனவரி 17) முதல் 20ஆம் தேதி வரை பல சலுகைகளை அமேசான் தளம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த சேலலில் இடம்பெற்றுள்ள மொபை போன்கள் என்னென்ன? அவற்றின் சலுகை கால விலைகள் என்னென்ன?
அமேசானில் பொருட்களை வாங்க...
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9 ப்ரோ 5ஜி மொபைல் போன் அமேசான் சேலில் அட்டகாசமான விலையுடன் வருகிறது. 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை இந்த மொபைல் போன் கொண்டுள்ளது. அத்துடன் இதில் 48 மெகாபிக்சல் பின் கேம்ராவும், 16 மெகாபிக்சல் செலஃபி கேமராவும் இடம்பெறுள்ளன. இந்த போனின் விலை 64,999 என்பதிலிருந்து அமேசான் சேலில் 59,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எஸ்பிஐ கிரேடிட் கார் பயன்படுத்தினால் மேலும் 5 ஆயிரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவற்றுடன் பழைய மொபைல் போனை எகஸ்சேஞ்ச் செய்தால் அதற்கும் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மீயின் நார்சோ 50 ஏ மொபைல் போன் அமேசான் சேலில் 1,250 ரூபாய் வரை குறைந்து விற்கப்படுகிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை இந்த போன் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் பின் கேமராவும், 8 மெகாபிக்சல் முன் கேமராவும் இடம்பெற்றுள்ளன. இந்த போனின் விலை 13,999 ரூபாயிலிருந்து 11,499 ரூபாயாக குறைத்து விற்கப்படுகிறது. இந்த போனிற்கும் எஸ்பிஐ கார்டு மற்றும் பழைய போன் எக்ஸ்சேஞ்ச் செய்தால் சலுகைகள் அதிகமாக உள்ளது.
ஸியோமி 11 லைட் 5ஜி போனும் அமேசான் சேலில் மிகவும் குறைந்த விலைக்கு வருகிறது. 6.8 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜை இது கொண்டுள்ளது. இவற்றுடன் 64 மெகாபிக்சல் டிர்பிள் கேமரா வுடன் 20 மெகா பிக்சல் செலஃபி கேமராவும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் விலை 31,999 ரூபாயிலிருந்து 26,999 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த போனிற்கும் எஸ்பிஐ கார்டு மற்றும் பழைய போன் எக்ஸ்சேஞ்ச் செய்தால் சலுகைகள் அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க: Google Pay செயலியை அடிக்கடி பயன்படுத்துபவரா? கூகுள் பே மூலம் தங்கம் வாங்குவதும், விற்பதும் எப்படி?