தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சிறப்பு இருதய நோய் மற்றும் நுரையீரல் நோய் கண்டறியும் சிகிச்சை முகாமை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீன மடத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். 


Navaratri recipe: சர்க்கரை இல்லாத நவராத்திரி இனிப்பு ரெசிபிகள் - விராட் கி பர்ஃபி, லெள கி கே லட்டு செய்வது எப்படி?




இந்நிலையில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருநாள் நவம்பர் 4 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கங்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து நடத்திய மாபெரும் இருதய நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான மருத்துவ முகாம் இன்று தருமபுரம் குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். 


Minister Udhayanidhi: செங்கலை தொடர்ந்து முட்டையை கையில் எடுத்த உதயநிதி - நீட் விவகாரத்தில் மீண்டும் சம்பவம்!




அதில்  எக்கோ, இசிஜி,  பரிசோதனை செய்யப்பட்டது. இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான தனி பிரிவுகளில் மருத்துவ வல்லுனர்கள் இலவசமாக பரிசோதனை மேற்கொண்டனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவருக்கு விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.


Madonna Sebastian: 'விஜய் குழந்தை மாதிரி.. அர்ஜூன்கிட்ட பேச பயம்' லியோ அனுபவத்தை பகிர்ந்த மடோனா செபாஸ்டின்!