நாகையில் நீத்தார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பணியின்போது உயிர் நீத்த 

189 காவலர்களுக்கு 57 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

 

கடந்த 1959 ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21,ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தார் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், எஸ்பி ஹர்ஷ்சிங், கடலோர காவல்படை பெட்டி அலுவலர் லலித்சிங்சாம்பயால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பணியின் போது உயிர் நீத்த 189 காவலர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து சோக கீதங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து காவல்படை சார்பாக 57 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.