தமிழ்நாடின் கடைசி 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக லலிதா ஐஏஎஸ் மாவட்டத்தை வரைவு செய்து தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாறுதல் உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக, திருவள்ளூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஏ.பி.மகாபாரதி ஐஏஎஸ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பொறுப்பேற்ற முதல் நாளில் வேளாண் துறை அமைச்சருடன் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர் பாதிப்புகளை இணைந்து பார்வையிட்டார். இன்று திடீரென மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். பின் நகரின் பலபகுதிகளில் தூய்மை பணியையும், குப்பை கொட்டுவதையும் பார்வையிட்டார்.
அதனை அடுத்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில், நோயாளிகள் சிகிச்சை பெறுவதையும், சிகிச்சை வழங்குவதையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகாபாரதி, அரசு இயந்திரம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும், இன்று மயிலாடுதுறை பேருந்துநிலையம், அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தேன். செல்லும் வழியில் பல இடங்கள் குப்பைகளாக உள்ளன. தூய்மைப் பணிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படாமல் உள்ளன. விரைவில் தூய்மை பணியாளர் உள்ள திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்பட்டு நோய் தொற்று இல்லா நகரமாக உருவாக்கப்படும் என்றும்,
TN Weather Update: தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே இருக்கும்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
பாதாள சாக்கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கபடும் எனவும், மருத்துவமனையில், புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்பிறகு இருதய நோய்க்கான சிகிச்சை திறன்பட நடைபெறும், மருத்துவர்களின் காலிபணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்றும் கூறினார். அவருடன் கோட்டாச்சியர் யுரேகா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி,மற்றும் மருத்துவ அலுவலகர்கள் உடன் இருந்தனர்.