சர்வதேச அளவில் 44வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற ஜுலை 28 -ம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10 -ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு விளம்பரங்களையும் செய்து வருகிறது.
National Herald Case: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு - சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜர்!
சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள 'நேப்பியர் பாலம்" செஸ் போர்டு கட்டங்களைப் போன்று வர்ணம் தீட்டப்பட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், ஓவியர் ரஜினிபாஸ்கர், மாவட்ட செஸ் கழகச் செயலாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் இந்த முயற்சியில் நடைபெற்று வருகிறது.
Chess Olympiad 2022 : கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..உற்சாக வரவேற்பளித்த வீரர்கள்
மயிலாடுதுறை நகரின் பிரதான பகுதியான அரசு மருத்துவமனை சாலையில் உள்ள இந்த பாலம் பொலிவு பெற்று வருவதை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். முன்னதாக, தமிழக அரசின் ஒலிம்பியாட் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். மேலும் இந்த பாலத்தின் வண்ணம் தீட்டும் பணிகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாக வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்