Just In





இனிமேல் கவலை வேண்டாம்! தூத்துக்குடியிலிருந்து தஞ்சைக்கு உரங்கள்... பயிரிட தயாராகும் விவசாயிகள்
தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 600 டன் டிஏபி, காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சாவூருக்கு வந்தது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்று மற்ற பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக கோடையில் நெல், எள், உளுந்து, பயறு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.
இதற்கு தேவையான உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சம்பா அறுவடை செய்வதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்
இதையும் படிங்க: ”நாங்கள் முடிவெடுத்தால் நாடு அழிந்துவிடும் ” அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்...!
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 10 வேகன்களில் 600 டன் காம்ப்ளக்ஸ், டிஏபி உரம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து வந்த உர மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்தில் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் பகுதியாகவும் காவிரிப் பாசனம் பெறுகின்றன. இந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிக்காக மேட்டூர்அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தில் புகுந்த ப்ரோக்கர்! ஏபிபி நாடு நிருபரை அடிக்க முயற்சி - தேனியில் நடந்தது இதுதான்
நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. இதனால் வடிமுனைக் குழாய் வசதியுள்ள இடங்களில் மட்டும் ஏறத்தாழ 50 சதவீத அளவுக்கே குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும், டெல்டா பாசனத்துக்காக ஜூலை 28-ம் தேதி அணை திறக்கப்பட்டது. இதையடுத்து காலதாமதாக சம்பா, தாளடியை விவசாயிகள் மேற்கொண்டனர். தற்போது சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.