தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக அரசு சார்பில் மாநில முழுவதும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.


டெங்கு காய்ச்சல் அபாயம்:


பகல் நேரத்தில் கடிக்கும் இந்த வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக அமைகிறது.  இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் திடீர், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.




இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை சுற்றறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், மழைப் பொழிவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளும், குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பதிவாகி வருகிறது.


ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக உள்ளது. எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 


Minister Sekar Babu: ”அறநிலைத்துறை பற்றி அவதூறு பரப்பினால்”.. அமைச்சர் சேகர்பாபு பகிரங்க எச்சரிக்கை..




 


அவ்வாறு இல்லாவிடில் அவர்களுக்கு உரிய விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொது மக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறலின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு 500 ரூபாய் வரை ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


4 பேர் பாதிப்பு:


இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது உடைய கல்லூரி மாணவர் சென்னையிலிருந்து சொந்தவூருக்கு வந்திருந்தார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அரசு மருத்துவமனை டெங்கு சிகிச்சை பிரிவில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


Aiadmk - Bjp Alliance: பாஜக உடன் கூட்டணி குறித்த கேள்வி; நைசாக நழுவிச் சென்ற ஜெயக்குமார்




இதேபோல் பெங்களூரில் இருந்து வந்தவருக்கும்,சீர்காழி சேர்ந்த இருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தததை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.


டெங்கு பாதிப்பு அடுத்து சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள் தேங்காய் ஓடுகள், பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Udhayanidhi Stalin: 'கார்ப்பரேட் உலகின் அநீதியை தட்டிக் கேட்கும் உதயநிதி'.. அக்டோபர் 2 ஆம் தேதி இருக்கு கச்சேரி..!