சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை திருக்கோயிலில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாரணி, என்பவர் சிதம்பரத்தை சேர்ந்தவர், இவருக்கு வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் ஆலையத்திலும், சாருமதி, கடலூர் மாவட்டம்,  ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் ஆலையம், சுப்பிரமணிய திருக்கோவிலிலும், சி.சிவரஞ்சனி பெரம்பலூர் மாவட்டம், எழுமூர், மயிலாப்பூர் முண்டககன்னி அம்மன் ஆலயத்திலும், எம்.கோமதி தாம்பரம், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணியம் ஆலையத்திலும், பார்கவி அண்ணாநகர், பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோவிலகளிலும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து 5 பெண் ஓதுவார்கள் உட்பட  மொத்தம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தேர்வு செய்யப்பட்ட ஓதுவார்கள் பணி நியமன ஆணையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருக்கோயில்களில் பணி காலங்களில் மரணம் அடைந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மூன்று பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.  


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு திருக்கோவில்கள் பராமரிப்பு, திருத்தேர் வழங்குதல் உட்பட பல பணிகளை செய்து வருகிறது இந்த அரசு. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இயங்கி வரக்கூடிய திருக்கோவில்களில் காலியாக உள்ள  பணியாளர்களை நிரப்புவது, பணிக்காலத்தின் பொழுது மரணம் அடைந்த ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்குதல் பல்வேறு சேவைகள் தொடர்ந்து இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 5 பெண்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.  எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற திராவிட மாடலின் ஆட்சியில் இவை நிறைவேற்றப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் புதிதாக தேர்ச்சி பெற்ற 5 பெண் ஓதுவார்களை நியமிப்பது மிகவும் பெருமையான ஒன்று. இந்த பணிகளை மேற்கொள்ள செய்த தமிழ்நாடு முதல்வர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 34 பணிகள் திருக்கோவில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.


இதுவரை 107 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  மேலும் திருக்கோவில்கள் காலியாக உள்ள  காலி பணியிடங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நிறப்படப்படும். இரண்டரை வருட திமுக ஆட்சியில் இதுவரை 9 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 180 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே 107 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியிடங்களும் கூடிய விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைணவ கோவில்களில் பெண் ஓதுவார்கள் பாடல்கள் பாடுவதில்லை. பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்த அர்ச்சகர்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி வேண்டும் என்ற காரணத்தினால் திருக்கோயிலில் உதவி அர்ச்சகராக பணி வழங்கி ஊக்கத்தொகை வழங்கி தலைமை ஆசிரியரிடம் பயிற்சி பெற்று இன்னும் சிறந்த முறையில் அர்ச்சர்களாக பணியாற்றுவதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 71 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் சேருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.


160 க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பள்ளியில் பயின்றவர்களுக்கு  உதவி அர்ச்சர்களுக்கான பயிற்சி காலமாக இது மாற்றியமைத்து தரப்படும். தற்பொழுது புதிதாக 11 பெண்கள் அர்ச்சகர் பள்ளியில் சேர்ந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி தற்பொழுது 111 பேர் அர்ச்சகர்கள் பணியிடங்களில் பயிற்சி மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள். தமிழகத்தில் 714 கோயில்கள் ஆயிரம்  ஆண்டுகள் பழமையான கோயில்கள் என தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழக அரசால் இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இதில் உபயதாரர் நிதியாக 60 கோடிக்கு மேல் பெறப்பட்டதால் 87 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 


5 ஆண்டுகளில் ஆயிரம் வருடங்கள் பழமையான 714 திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.  திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 700 கோடி தமிழக அரசால் திருக்கோயில்கள் பராமரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள காரணத்தினால் தான் உபயதாரர்களின் நிதி இந்த ஆட்சியில் அதிகமாக 750 கோடியாக உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு அதிக அளவில் உபயதாரர்கள் நிதிகள் வரவில்லை. இந்த ஆட்சி காலத்தில் உண்டியல் வசூல் என்பது ஒவ்வொரு முறையும் கூடிக் கொண்டே தான் செல்கிறது.


முழு நேர அன்னதான பிரசாத திட்டத்தை தொடர்ந்து 15 கோயில்களில் முழுமையாக அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் 5 கோயில்களுக்கு அன்னதான பிரசாதம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 48 திருக்கோள்களில் இந்தத் திட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். விமர்சனத்தை பார்த்து எப்பொழுதும் கோபப்படாத ஆட்சி இந்த ஆட்சி. நல்ல விஷயம் என்று தெரிந்தும் அரசியல் ஆதாயத்திற்காக அவதூறு பரப்ப கூடியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான் கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்”  என தெரிவித்தார்.