மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் அருகே பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் மற்றும் மகளை  சீர்காழியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராம்குமார் காரில் கருவாழைக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வைத்தீஸ்வரன்கோயில் மயிலாடுதுறை இடையே சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும் சிறு சிறு விபத்துகளும் அவ்வப்போது நடைபெறும் வருகிறது.




இந்த சூழலில் ஆத்துகுடி அருகே கார் வந்தபோது, கார் ஓட்டுநர் ராம்குமாரின் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குளத்தில் குதித்து காரின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் மற்றும் 2 குழந்தைகளையும் பத்திரமாக காப்பாற்றி மீட்டனர். இதனால் அவர்கள் மூன்று பேரும் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக நூலிழையில் உயிர்தப்பினர். 


A4 Paper Purchase: பள்ளிகளில் ஏ4 தாள் வாங்க ரூ.10 கோடி நிதியா? கல்வித்துறை உத்தரவால் எழும் கேள்விகள்




பின்னர் மூவரையும் சிகிச்சைக்காக  108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Kareena Kapoor : டின்னர் டைம் குடும்பத்தோடு தான்... நேர்மையே பிடிக்கும் - 23 ஆண்டுகளாக திரையில் கரீனா கபூர்









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண