பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான ஏ4 தாள் வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை அடுத்து, ஏ4 தாள் வாங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 


முன்னதாக பள்ளிகளில்‌ வினாடி வினா நடத்திடத்‌ தேவையான ஏ4 தாள் பேப்பர்கள்‌ வாங்க பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல்‌ சார்ந்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இளம்பகவத் ஐஏஎஸ் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில் தெரிவித்ததாவது:


''2022-23ல்‌ மதிப்பீட்டுப் புலம்‌ (Assessmet Cell) வாயிலாக 6 முதல்‌ 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்‌ உயர்‌ தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ வாயிலாக வினாடி வினா நடத்தத்‌ தேவையான ஏ4 தாள் வாங்குதல்‌ சார்ந்து நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கென EMIS தரவு தளத்தில்‌ தற்போதுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ வகுப்பு மற்றும்‌ பள்ளி வாரியாக வினாத் தாள்கள்‌ அச்சிட தேவையான ஏ4 தாள்கள் மற்றும்‌ அதற்கு தேவைப்படும்‌ நிதியும்‌ கணக்கிடப்பட்டு இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மேற்காணுமாறு நிதியினை விடுவிக்க அனுமதி வேண்டப்படுகிறது.


வ.எண்.  மாவட்டம் - விடுவிக்கப்பட்டுள்ள நிதி (ரூபாயில்)


1.அரியலூர்- 1297900
2.செங்கல்பட்டு- 2794228
3.சென்னை - 3646972
4.கோயம்புத்தூர்‌ - 3119068
5.கடலூர்- 3530744
6.தருமபுரி- 3431964
7.திண்டுக்கல்- 2380880
8.ஈரோடு - 3006668
9.கள்ளகுறிச்சி - 3283496


10 காஞ்சிபுரம்- 1832624


11.கன்னியாகுமரி - 1417108


12.கரூர் - 1495616


13.கிருஷ்ணகிரி - 3861028


14.மதுரை - 2854580


15.மயிலாடுதுறை - 1054872


16.நாகபட்டினம்- 1109924


17.நாமக்கல் - 2427404


18.பெரம்பலூர் - 999700


19.புதுக்கோட்டை - 3410960


20.ராமநாதபுரம் - 1491160


21 இராணிபேட்டை- 1997656


22. சேலம்- 5413892


23.சிவகங்கை- 1622816


24. தென்காசி - 1661732


25. தஞ்சாவூர் - 2773124


26. நீலகிரி- 627308


27. தேனி- 1343588


28. தூத்துக்குடி - 1193112


29. திருச்சிராபள்ளி- 2920820


30. திருநெல்வேலி - 1384032


31 திருப்பத்தூர் - 1681400


32 திருப்பூர் - 3238516


33 திருவள்ளூர் - 3478652


34 திருவண்ணாமலை- 4941936


35 திருவாரூர் - 1625244


36 வேலூர் - 2150632


37 விழுப்புரம் - 3723704


38 விருதுநகர் - 2015680


மொத்தம் - 9,22,40,740 ரூ.ஒன்பது கோடியே இருபத்து இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எழுநூற்று நாற்பது மட்டும் பள்ளிகளில்‌ வினாடி வினா நடத்திடத்‌ தேவையான ஏ4 தாள் பேப்பர்கள்‌ வாங்க பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது.'' 


இவ்வாறு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இளம்பகவத் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகள் இருந்தாலும்கூட, மொத்தமாக ஏ 4 தாள் வாங்கும்போது விலை குறையும். அதற்கு சுமார் 10 கோடி ரூபாய் தேவைப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 


இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 4 Result: முடிவுக்கு வந்த 8 மாதக் காத்திருப்பு- குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு- பார்ப்பது எப்படி? 


TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!


முறைகேட்டில் ஈடுபட்டதா ட்விட்டர் முன்னாள் சிஇஓ-வின் நிறுவனம்? ஹிண்டர்பர்க் அறிக்கையில் அதிர்ச்சி..! https://tamil.abplive.com/news/india/hindenburg-report-next-target-is-block-ex-twitter-ceo-jack-dorsey-led-payments-firm-know-more-details-108148