மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அரிவேளூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன்கோயில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று திடீரென வயிறு வீங்கிய நிலையில் உயிரிழந்தன. இந்நிலையில் இன்றும் திடலில் மேய்ந்த மேலும் சில ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. அரிவேளூர் கிராமத்தை சேர்ந்த மீனா என்பவரின் 4  ஆடுகள், பன்னீர்செல்வத்தின் 3 ஆடுகள், மீராவின் 2 ஆடுகள் என மேலும் பல்வேறு நபர்களின் 15 ஆடுகள் இதேபோன்று வயிற்று பகுதி வீங்கிய நிலையில் உயிரிழந்தன. 




நமக்கான காலம் வரும்...’ தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிக்கை!


NEET UG 2021: நீட் விண்ணப்பப் படிவங்களில் இன்று நள்ளிரவு திருத்தம் செய்யல்லாம் - என்டிஏ


இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் ஆடுகள் மேய்ந்த திடலில் சென்று பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் யாரோ அரிசியில் விஷம் கலந்து பாத்திரத்தில் வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் ஆடுகளின் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் அரிசியல் விஷம் கலந்து வைத்து ஆடுகளை கொன்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 15 ஆடுகள் உயிரிழந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




2022யை தன்வசமாக்க போராடும் விஷால்! - விஷால் 32, 33 மற்றும் 34 படங்களின் பேக் டு பேக் அப்டேட்!


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் அப்பகுதி  ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு விஷம் வைத்து கொன்று அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க செய்துள்ளது மட்டும் இன்றி வாய் இல்லா ஜீவன் என்று சொல்லக்கூடிய ஆடுகளை ஈவு இரக்கமின்றி விஷம் வைத்து கொன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது‌. 




தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!


மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கால்நடைகளை துன்புறுத்தும் நபர்களை நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையாக கொலைக் குற்றத்திற்கான தண்டனையை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற ஈவு இரக்கமற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் தங்களின் செயலை மாற்றிக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர்.


மதுவந்தி வீட்டிற்கு சீல்... கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் கோர்ட் நடவடிக்கை!