0நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக தங்களது விண்ணப்பங்களில், இன்று முதல் சில குறிப்பிட்ட திருத்தங்களை இன்று வரை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்ததுள்ளது. 


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற்றது. 


தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2021 நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பப் படிவங்களில் சில குறிப்பிட்ட தகவல்களை (பாலினம், வயது, மின்னஞ்சல் முகவரி, நாடு, 10, 12 பள்ளிப்படிப்பு விவரங்கள்) உட்பட வேறு திருத்தங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் செய்துகொள்ளலாம். neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  விண்ணப்பதாரர்கள், இணையதளத்திற்குச் சென்று, தங்களுடைய விவரங்களை உறுதி செய்து, தேவைப்படுகின்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Kanimozhi Meets Naveen Patnaik | நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்... ஒடிசா முதல்வரை சந்தித்த கனிமொழி எம்.பி., 


*ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான கால அவகாசம் இன்று (அக்டோபர் 14ம் தேதி ) இரவு 11.59 மணி வரையாகும். நீட் தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 




பொது அறிவிப்பு:  திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in and https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  


வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும்,  neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.